Categories
Growth Promoters
Order Tracking and Customer support
8pcs
Rs 320
15pcs
Rs 450
(Most Bought)
40pcs
Rs 900
100pcs
Rs 2000
(MSS PARCEL)
Buy Bulk / Wholesale
sku: p1283 ┃ Status: Available in stock
...
OtherNames: கல்யாண முருங்கை செடி
Product Category: Cuttings
Available In Stock
Shipped From: Kalakkad, Tirunelveli.
கல்யாண முருங்கை இலை, விதை, பூ, பட்டை அனைத்தும் மருத்துவப் பயன்கள்கொண்டவை. It can be easily grown from cuttings.
For bulk orders message us here!
இதற்கு கல்யாண முருங்கை முள்முருங்கை, கிஞ்சுகம், கவிர், புழகு, முள்முருக்கு, மலை எருக்கு போன்ற பெயர்கள் உண்டு. முருங்கை போல் கிளைகளை வெட்டி வைத்தால் வேர் பிடித்து வளரும் தன்மையுடையது. மரத்தின் தண்டில் முட்கள் ஆங்காங்கே இருப்பதால், 'முள்'முருங்கை என்று பெயர் பெற்றது.
Why Choose Tharuvi?
💸
Quality Products
🕖⛟
Fast Delivery
📦
3L Safe Packing
✌🏿
Return Policy
இதன் இலைகள், விதைகள் மற்றும் மலர்களில் பல வேதிப்பொருள்கள் உள்ளன. வெற்றிலை, மிளகு போன்ற கொடி வகைத் தாவரங்கள் பயிரிடப்படும் இடங்களில் அவை வளர்வதற்கு ஏதுவாக இது வளர்க்கப்படுகிறது. பெரும்பாலும் கொடிக்கால்களில் இந்த மரம் வளர்க்கப்படுகிறது. இதன் முழுத்தாவரமும் காரச்சுவையும் வெப்பத்தன்மையும்கொண்டது. அகன்ற, பச்சை நிற இலைகளையும் பளிச்சிடும் சிவப்பு நிறப் பூக்களையும்கொண்டது.
இதன் இலை, சிறுநீரைப் பெருக்குவதோடு மலத்தை இளக்கும்; தாய்ப்பாலை பெருக்கும்; மாதவிலக்கைத் தூண்டும்.
இதன் பூக்கள், கருப்பையைச் சுத்தமாக்கும். பட்டைகள், கோழை அகற்றும்; காய்ச்சல் நீக்கும்; குடல்புழுக்களைக் கொல்லும். விதைகள், மலமிளக்கும்.
கன்னிப்பெண்கள் இருக்கும் வீடுகளில் இதை நட வேண்டும் என்பது மரபாக இருந்திருக்கிறது. அதேபோல் பெண்கள் அதிகமாக உள்ள வீடுகளில் இந்த மரத்தை நட்டு, அதன் இலையை மாதந்தோறும் சமைத்துக் கொடுத்து வந்தால், பெண்களுக்கு மாதவிடாய், கருப்பை சார்ந்த எந்தவித உடல் பிரச்னையும் இல்லாமல் இளமையுடன், அழகான பெண்ணாக உருவெடுத்து நிற்பார்கள். அவர்களுக்கு வரக்கூடிய வலி, வேதனைகளில் இருந்து அவர்களை காக்கக்கூடியது இந்த முருங்கை.
இந்த மரம் பெரும்பாலும் பெண்களின் உடல்நலனுக்கு நன்மை பயக்கக்கூடியது. மாதவிடாயின்போது வரக்கூடிய வயிற்றுவலியைக் குணமாக்க, இதன் 30 மி.லி இலைச்சாற்றை காலையில் வெறும் வயிற்றில் 10 நாள்கள் தொடர்ந்து குடித்துவர வேண்டும். அதேபோல் இலையிலிருந்து ரசம் செய்து சாதத்துடன் சேர்த்துச் சாப்பிட்டு வந்தாலும், வயிற்றுவலி குணமாகும்.
கறுப்பு எள் ஊறவைத்த நீர்விட்டு, இதன் இலையை அரைத்து, காலை, மாலை என சாப்பிட்டுவந்தால் தாமதித்த மாதவிடாய் சீராகும்.
கர்ப்பக் காலங்களில் இதன் இலைகளை அரிந்து, சிறு பயறுடன் சேர்த்து வேகவைத்துக் கொடுப்பார்கள். இது கர்ப்பிணிகளுக்கு வரக்கூடிய சிறுநீர் எரிச்சலைக் குணமாக்கும்; தாராளமாக சிறுநீர் வெளியேற உதவும்.
இதன் இலைச் சாற்றை தினமும் குடித்துவந்தால், குழந்தை பாக்கியம் இல்லாத பெண்களின் குறை நீங்கும். அத்துடன் இந்த இலைச் சாற்றை அருந்துவதால், பொதுவாக நீர்த்தாரையில் ஏற்படும் எரிச்சல் சரிகும்; உடல் இளைக்கும்.
குழந்தைப்பேறு வேண்டும் பெண்கள் கல்யாண முருங்கைப்பூவுடன் 4 மிளகு சேர்த்து அரைத்து, வெறும் வயிற்றில் காலையில் சாப்பிட்டு வர பலன் கிடைக்கும்.
குழந்தை பெற்ற தாய்மார்கள், பால் சுரக்க வேண்டுமென்றால், இதன் இலையை தேங்காய் எண்ணெய்விட்டு சமைத்துச் சாப்பிட்டுவந்தால் கைமேல் பலன் கிடைக்கும். இதன் இலையை நறுக்கி, வெங்காயம் போட்டு தேங்காய், நெய்விட்டு வதக்கிச் சாப்பிட்டு வந்தாலும் பால் சுரக்கும்.
இலையுடன் கசகசா, உளுந்து, மாதுளம்பழச் சாறு சேர்த்து அரைத்துச் சாப்பிட்டால், ஆண்மை பெருகும்; தாம்பத்ய உறவில் ஆர்வம் ஏற்படும்.
குடல்புழுக்களின் தொல்லையால் சில குழந்தைகள் அவதிப்படுவார்கள். அப்படிப்பட்ட நேரங்களில் 10 சொட்டு கல்யாண முருங்கை இலைச் சாற்றை சிறிது வெந்நீர், தேன் கலந்து குடிக்கக் கொடுத்தால் பலன் கிடைக்கும். பெரியவர்கள் இதன் 4 டீஸ்பூன் இலைச் சாற்றுடன் தேன் கலந்து குடித்தால், புழுக்கள் வெளியேறும். வயிற்றுப்போக்கு ஏற்பட்டால் மோர் குடிக்க வேண்டும்.
இதன் இலைச் சாற்றுடன் தேங்காய், மஞ்சள் சேர்த்து அரைத்து, மேல் பூச்சாகப் பூசிக் குளித்துவந்தால், சொறி, சிரங்கு சரியாகும். 60 மி.லி இலைச் சாற்றுடன் 15 கிராம் உப்பு சேர்த்து காலை வேளையில் குடித்துவந்தால் லேசான வயிற்றுப்போக்கு உண்டாகும். அப்போது வயிற்றுப் பூச்சிகள் வெளியேறும்.
நெஞ்சில் கட்டியிருக்கும் சளி அகல வேண்டுமென்றால், இலையுடன் அரிசி சேர்த்து அரைத்துத் தோசை செய்துசாப்பிட்டால் பலன் கிடைக்கும்.
இதன் இலையுடன் சித்தரத்தை, மிளகு, பச்சரிசி சேர்த்து வடை செய்வார்கள். இதுவும் சளியை அகற்றும் தன்மைகொண்டது.
கல்யாண முருங்கையுடன் முருங்கை, மிளகு, பூண்டு சேர்த்து அரைத்துச் சாப்பிட்டால் ரத்தச்சோகை சரியாகும்.
Buy Now
8pcs- Rs
320
15pcs- Rs
450(Most Bought)
40pcs- Rs
900
100pcs- Rs
2000(MSS PARCEL)
Ordering made easy. Just a click away!
Product code# p1283

Looking for something else? See Complete Catalog
Tharuvi Exclusive Products
Related Products::