இந்திய ஒன்றியத்தில் மட்டும் ஒவ்வொரு ஆண்டும் சராசரியாக 58,000 நபர்கள் பாம்பு கடிக்கு பின்னர் உயிரிழக்கிறார்கள். காலநிலை மாற்றத்தின் ஒரு பகுதியாக பாம்புகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதை நாம் அனுபவ ரீதியாக கண்டு உணர்கிறோம்.
இந்நிலையில் பாம்பு கடியில் இருந்து குணமடைபவர்களின் விகிதம் குறைவாக உள்ளது. இதற்கு பல்வேறு காரணிகள் உள்ளன.
நம் மரபில் பாம்பு கடிக்கு எளிய தீர்வுகளும் மூலிகைகளும் பயன்படுத்தப்பட்டு வந்தன. அவற்றை பயன்படுத்தி குணமாகி மீண்டவர்கள் ஏராளம்.
நம் வாழ்வியலில் இருந்து மருத்துவத்தை பிரிக்க இயலாது. நோயிலிருந்தும் விஷக் கடியில் இருந்தும் விடுபடுவதற்கான வழிமுறைகள் நம்முடைய முந்தைய சந்ததிகளிடம் இருந்தது.
உள்ளூர் சார்ந்த அறிவை (ITK - Indigenous Traditional Knowledge) நாம் காலப்போக்கில் இழந்து வருவதோடு மட்டுமல்லாமல் மாற்றுத் தீர்வும் இல்லாமல் அல்லல்படுகிறோம். இத்தகைய சூழலில், பாரம்பரிய உள்ளூர் அறிவை கொண்டு தீர்வை தரக்கூடியவர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். அவர்கள் நம் பொக்கிஷம். அவர்களிடம் உள்ள அளப்பரிய அந்த அறிவை நம்மோடு பகிர்வதற்கும் தயாராக இருக்கிறார்கள்.
நாம் அவர்களிடமிருந்து அந்த அறிவை பெறுவதற்கான வாய்ப்பை அகவெளி வாழ்வியல் நடுவம் ஏற்படுத்தி வருகிறது. அதன் ஒரு பகுதியாக, வருகிற ஞாயிற்றுக்கிழமை (டிசம்பர் 10, 2023) ஒரு நிகழ்வை ஏற்பாடு செய்திருக்கிறோம்.
தஞ்சாவூர் மாதாக்கோட்டை சாலையில் உள்ள அகவெளி வாழ்வியல் நடுவத்தில் இப்பகிர்தல் நடைபெற இருக்கிறது.
விஷக்கடிக்கான எளிய தீர்வுகள் தலைமுறை தலைமுறையாக கடத்தப்பட்டு, இப்போது செய்துவரும் திரு.மணிகண்டன் அவர்கள் விஷக்கடிக்கான தீர்வு குறித்து நம்மோடு பல புரிதல்களை பகிர்ந்து கொள்ள இருக்கிறார். இது வேறெங்கும் எளிதாக கிடைக்காத ஒன்று.
உள்ளூர் பாரம்பரிய அறிவை பெற்று, நலமடைந்து அடுத்த தலைமுறைக்கு கடத்தக் கூடியவர்களில் நாமும் ஒருவராக ஆவதற்கான வாய்ப்பினை பெற 7639494950 என்ற எண்ணிற்கு WhatsApp செய்யுங்கள் அல்லது அலைபேசியில் அழையுங்கள்.