*அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை*
*குரு பஞ்சகவ்யம்*
~~~~~~~~~~~~~~~~~
*பசுமைப் புரட்சிக்காக மாபெரும் ஆற்றல் வாய்ந்த குரு பஞ்சகவ்யம் செய்யும் முறையினை விளக்குகிறார் தயவு திரு ஜகத்குரு ஐயா அவர்கள்.*
<><><><>
*பஞ்சகவ்யம் தயாரிக்க தேவையான பொருட்கள்:*
1. நாட்டு மாட்டு சாணம் 10 கிலோ
2. நாட்டு மாட்டு நெய் 1 லிட்டர்
3. நாட்டு சர்க்கரை 1 கிலோ
4. தயிர் 6 லிட்டர்
5. பால் 6 லிட்டர்
*(மூன்று மணி நேரத்திற்குள் சேகரிக்கப்பட்ட புத்தம் புதிய பால்)*
6. கோமியம் 10 லிட்டர்
7. *4 கிலோ கற்றாழைக்கு 300 கிராம் அளவு கடுக்காய் தூள் கலந்த கலவை*
8. வாழைப்பழம் 2 டஜன்
9. கரும்புச்சாறு அல்லது பனங்கள் 4 லிட்டர்
10. இளநீர் 4 லிட்டர்
11. *புளிச்சைக் கீரையின் இலைச்சாறு - 4 லிட்டர்*
(சிகப்பு (அ) பச்சை)
*இப்போது குரு பஞ்சகவ்யம் உருவாக்கும் முறையை அறிந்து கொள்வோம்:*
*முதல் நாள்:*
_______________________
நாட்டு மாட்டு சாணம் - 10 கிலோ
நாட்டு சர்க்கரை - 1 கிலோ
அரைத்து பிழிந்து எடுத்த புளிச்சைக் கீரை சாறு - 4 லிட்டர்
இதனுடன் 1- லிட்டர் நாட்டு மாட்டு நெய்
இவை அனைத்தையும் ஒன்றாக கலந்து மூன்று நாட்களும் அந்த கலவையை நன்கு கலக்கி கலக்கி வைக்க வேண்டும்.
*இப்படி செய்வதால் சாண கலவையில் நன்கு நொதித்தல் (fermentation) ஏற்படும்.*
*நான்காவது நாள்....*
_______________________
மேற்கூறியவாறு தயாரித்து வைத்திருக்கும் சாண கலவையுடன்...
*மூன்று மணி நேரத்திற்குள் சேகரிக்கப்பட்ட புத்தம் புதிய பால்...*
*6 - லிட்டர்*
6 - லிட்டர் தயிர்
கோமியம் - 10 லிட்டர்
இளநீர் - 4 லிட்டர்
கரும்புச்சாறு அல்லது பனங்கள் - 4 லிட்டர்
2 டஜன் நன்கு கனிந்த வாழைப்பழத்தை தோலோடு நறுக்கி மிக்ஸியில் போட்டு அரைத்து கூழாக்கியது
அனைத்தையும் சேர்க்க வேண்டும்.
பிறகு....
கற்றாழை கடுக்காய் சேர்ந்த கலவையை அந்த கடுக்காய் திப்பியுடன் சேர்த்து மொத்தமாக அப்படியே கலக்கி பஞ்சகவ்வியத்துடன் கலந்து விட வேண்டும்.
இந்த பஞ்சகவியம் கலவையை அப்படியே 21 நாட்களுக்கு வைத்து விட வேண்டும்.
பஞ்சகவ்வியம் செய்வதற்கு உலோக பாத்திரம் பயன்படுத்தக் கூடாது. மாற்றாக பிளாஸ்டிக் டப்பாவை (plastic drum) பயன்படுத்தவும்.
மேற்கண்ட அனைத்து பொருட்களையும் நன்றாக கலந்து பிளாஸ்டிக் ட்ரம்மின் வாய்ப்பகுதியை ஒரு காட்டன் துணியால் மூடி வைக்க வேண்டும். பிளாஸ்டிக் மூடியை பயன்படுத்தக் கூடாது.
தினசரி இரண்டு வேளை ஒரு மூங்கில் குச்சியை கொண்டு நன்கு கலக்கி விட வேண்டும். இவ்வாறு கலக்கி விட பயன்படுத்திய மூங்கில் குச்சியை சுத்தமாக கழுவி வைக்க வேண்டும்.
மேற்கண்ட கரைசலை தினமும் இருவேளை 60 முறை வலப்புறம் மட்டுமே கலக்க வேண்டும். இடப்புறமாக கலக்கக்கூடாது.
21 நாட்களுக்குப் பிறகு இந்த பஞ்சகவ்விய கரைசல் முழுமையாக தயாராகிவிடும்.
*பஞ்சகவ்வியத்தை உபயோகப்படுத்தும் முறை:*
_______________________
ஒரு லிட்டர் தண்ணீருக்கு 50 மில்லி பஞ்சகவ்யம் என்ற அளவில் கலந்து பயிர்களுக்கு தெளிக்கும் போது பயிர்கள் பூச்சிகளினால் எந்த வித பாதகமும் இல்லாமல் பசுமையாகவும் செழிப்பாகவும் அதிகமான அளவு விளைச்சலையும் தரக்கூடிய ஆற்றல் வாய்ந்ததாகவும் செயல்படும் என்பதில் எள்ளளவும் ஐயம் வேண்டாம்.
*கற்றாழை கடுக்காய் கலவை பஞ்சகவ்வியத்திற்கு ஏற்ப செய்யும் முறை:*
_______________________
பஞ்சகவ்யம் தயாரிக்க ஆரம்பித்த மூன்றாவது நாளில் 4 கிலோ அளவு சோற்றுக்கற்றாழையை வாங்கி கற்றாழை மடல்களின் விளிம்புகளில் இருக்கும் முட்களை மட்டும் லேசாக சீவி எடுத்துவிட்டு அதன் மற்ற பகுதிகளை வீணாக்காமல் அப்படியே சிறு சிறு துண்டுகளாக நறுக்கி அதை மிக்ஸியில் போட்டு நன்கு அரைக்கவும். இந்த கற்றாழை கூழை ஒரு பாத்திரத்தில் எடுத்துக் கொள்ளவும்.
இதனுடன் 300 கிராம் அளவு கடுக்காய் தூள் கலந்து ஒருநாள் முழுவதும் அப்படியே ஊற விடவும்.
நான்காம் நாள் கற்றாழை கூழோடு சேர்ந்த கலவையை அப்படியே குரு பஞ்சகவ்யத்துடன் கலந்து விட வேண்டும்.
கற்றாழை கடுக்காய் கலவை தயாரிப்பில் உள்ள எந்த பொருளையும் வீணாக்க வேண்டாம். அவை யாவும் இயற்கை உரமே ஆகும்.
<><><><><>
அபரிமிதமான விளைச்சலை தரக்கூடிய குரு பஞ்சகவ்யம் என்னும் இயற்கை உரத்தை வேளாண்மைக்கு பயன்படுத்தி விவசாயிகள் பெருமளவு லாபத்தை பார்க்கலாம்!
மண்ணின் வளத்தையும் காக்கலாம்!
எதிர்கால சமுதாயத்தையும் வளத்தோடு வரவேற்கலாம்!.
ஒரு முக்கிய குறிப்பு:*
*அன்பர்களே! அக்காலத்தில் பொதுவாக மாடுகள் என்றாலே நாட்டு மாடுகள் தான் இருந்தது. ஆனால் இப்போதுள்ள காலத்தில் எல்லோரிடமும் நாட்டு மாடுகள் இருப்பதில்லை. அப்படி நாட்டு மாடு இல்லாத பட்சத்தில்... எவ்வகை மாடாக இருந்தாலும் சரி அதனுடைய சாணத்தையும், நெய்யையும் பஞ்சகவ்வியத்திற்கு பயன்படுத்தலாம் இதில் எந்த வித தவறும் இல்லை. மேற்குறிப்பிட்டவாறு பஞ்சகவ்யத்தை தயார் செய்தால் மட்டுமே போதும். நல்ல பலனை காணலாம்.*
நன்றி வணக்கம்.
இப்படிக்கு
*ச. ஜகத்குரு*