Message Us! ➔

Blogs : All about Life and us!
பூச்சி கட்டுப்பாடு

*தினம் ஒரு தகவல்*

பயிரும்
பங்காளி சண்டையும்

நாம் பயிர் செய்யும் பயிரில் பங்கு போட வரும் பூச்சிகள் தான் நம் பங்காளிகள் 

* பூச்சி கட்டுப்பாடு*

பூச்சிகளின்  வகைகள் 3.
அவை கட்டுப்படுத்தும் முறைகள் மற்றும்
பூச்சிகளின் வாயமைப்பை வைத்து பார்த்தால் 3 வகைகள்  உள்ளன.
*1. சாறுஉறிஞ்சும் பூச்சிகள்*
*2. கடித்து தின்னும் பூச்சிகள்*
*3. சுரண்டி தின்னும் பூச்சிகள்*

தனித்தனி வாசனை
ஒவ்வொரு பயிருக்கும் தனித்தனி மணம் உள்ளது . 
அதில் தண்டு,இலை, பூ,காய்,கனி, ஒவ்வொன்றுக்கும் வேறு வேறு வாசனைகள் உண்டு. 

நம்மை விட நாய்க்கு 5 மடங்கு மோப்ப சக்தி அதிகம். அந்துப் பூச்சிகளுக்கு 10 மடங்கு மோப்ப சக்தி அதிகம்.

அந்துப்பூச்சிகள் முன்னிரவில் (7.00  - 10.00 மணிக்குள்) முட்டை இடுகின்றன.

அவை இருட்டுக்குள் தான் முட்டை இடும்.  முட்டையிட வேண்டிய பயிர் மற்றும் பயிரின் பாகத்தை மோப்ப சக்தியால் சரியாக தெரிவு செய்து அதன் மேல் முட்டையிடுகின்றன.

3G மற்றும் வேப்பங்கொட்டை கரைசல் தெளிப்பதால் பயிரில் வாசனை மாறுகிறது. முட்டை இடுவதற்காக  பறந்து வந்திருக்கும்.  அந்துப்பூச்சிகள் இருட்டுக்குள் பயிரை கண்டுபிடிக்க முடியாமல் குழம்புகின்றன.

முட்டையிட வேறு இடம் தேடி பறந்து விடுகின்றன.

அந்துப்பூச்சிகள் தாம் முட்டையிடும் இடத்தில் ஒருவித பசையைத் தடவி அதன் மீது முட்டையிட்டு பசையால் மூடுகின்றன.

முட்டைகள் உதிராமல் காப்பாற்றப்படுகின்றன. இதுவே நடைமுறை.

3G & வேப்பங்கொட்டை கரைசல் தெளிக்கப்பட்ட சூழ்நிலையில் அந்துப்பூச்சிகளுக்கு பசை சுரப்பதில்லை. பசையில்லாத இடத்தில் முட்டைகள் ஒட்டுவதில்லை. 

அவை மண்ணில் விழுந்து மக்கிவிடுகின்றன.

தோலுரிக்கும் புழுக்கள்,தூங்கும் கூட்டுப்புழுக்கள்
முட்டைக்குள் கரு வளர்ந்து 4-5 நாட்களில் புழுக்கள் வெளிவந்து பயிரைத் தின்கின்றன.

 தின்று வளர்ந்து தன்மேல் உள்ளதோலை உரிக்கின்றன. ( சட்டையை  கழற்றுகின்றன). தொடர்ந்து பயிரைச் சாப்பிட்டு வளர்ந்து 
4 - 5 தடவைகள் தோலுரித்து பெரிய புழுக்களாக வளர்கின்றன.

பின்பு கூட்டுப்புழுக்களாக மாறுகின்றன.  கூட்டுப்புழுப் பருவத்தில் தொடர்ந்து வளர்ந்து உருமாறி அந்துப்பூச்சிகளாகப் பறந்து விடுகின்றன.

இதுவே பூச்சிகளின் பொதுவான வாழ்க்கை முறை.

பயிரில் தெளிக்கப்பட்ட 3G & வேப்பங்கொட்டை கரைசல் இலைத்துளைகளின் மூலம் உறிஞ்சப்பட்டு பயிருக்குள்ளும், பயிரின் ஒவ்வொரு பாகத்துக்கும், ஒவ்வொரு திசுவுக்கும் சென்று சேருகின்றது.

பயிரைத்தின்னும் புழுக்கள்  3G & வேப்பங்கொட்டை சேர்த்தே உண்ணுகின்றன.

இதனால் புழுக்களின் வாய்க்குள் போனதும் ஒவ்வாமை ஏற்பட்டு பூச்சிகளுக்கு 
வாந்தி எடுக்க வைத்து வதைக்கிறது, பட்டினி கிடந்து சாகிறது.

பயிர்ச்சாற்றுடன் வயிற்றுக்குள் போன      3G & வேப்பங்கொட்டை கரைசல் குடலின் பாதிப்பகுதி வரை அமைதியாய் உட்செல்கிறது.

 கரைசலின் விளைவால் பின் குடல் எதிர்மறையாகச் செயல்பட்டு தாம் உண்ட பயிர்சாற்றை வெளியே தள்ளுகிறது. 
புழுக்கள் வாந்தி எடுக்கின்றது.

 மீண்டும் உமிழ்நீர் சுரக்கிறது. மீண்டும் பயிரைத் தின்கிறது மீண்டும் வாந்தி எடுக்கிறது.  அதாவது வயிற்றுக்குள் போன உணவு செரிமானம் ஆகாததால் புழுக்களுக்கு சத்து கிடைக்காமல் சுருண்டு விடுகின்றன.
சோர்ந்து போகின்றன. மேலும், மேலும் பயிரைத் தின்ன சத்தில்லாமல் புழுக்கள் பட்டினி கிடந்து சாகின்றன.

பயிரைத் தின்னாமல் புழுக்கள் வளர்வதில்லை. புழுக்கள் வளராமல் சட்டை உரிக்க முடிவதில்லை. சட்டையான தோலானது உரியாமல் தடிமனாகி உள்ளிருக்கும் புழுவை கொஞ்சம் கொஞ்சமாக சிறைப்படுத்திக் கொள்கிறது.

துணை செய்யும் தோழர் பட்டாளம் ஒவ்வொரு தோட்டத்திலும் தீமை செய்யும் பூச்சிகளைப் போலவே நன்மை செய்யும் பூச்சிகளும் நிறையவே உள்ளன. நாம் ரசாயன மருந்துகளைத் தெளிப்பதால் எல்லாப்பூச்சிகளும் கூண்டோடு  காலியாகின்றன.

3G & வேப்பங்கொட்டை கரைசல் பயிரைத்தாக்கும் பூச்சிகளை மட்டுமே பட்டினி போட்டுக் கொல்கிறது. 
பயிரை சாப்பிடாத எந்த ஒரு பூச்சிக்கும் எந்த ஒரு கெடுதலும் செய்வதில்லை. ஆகவே நன்மை செய்யும்  பூச்சிகள் பல்கிப் பெருகுகின்றன. அவை தீமை செய்யும் பூச்சிகளைப் பிடித்து சாப்பிடுகின்றன.

தொடர்ந்து பயிருக்கு 3G & வேப்பங்கொட்டை கரைசல் தெளிப்பதால் தீமை செய்யும் புழுக்கள், பூச்சிகள் மடிந்து கொண்டே இருக்கும். நமக்கு துணை செய்யும் தோழர் பட்டாளம் பெருகிக் கொண்டே இருக்கும்.

*வாட்ஸ் அப் குழுவில் இணைய*

https://rfr.budibase.app/app/whatsappgroup

8300093777

*நன்றி*
ஈஷா மண் காப்போம் இயக்கம்



See all posts!

Share & Spread:


create post



Place your orders here!

Proceed to Buy Order