Message Us! ➔

Blogs : All about Life and us!
தற்சார்பு பொருட்கள் தயாரிப்பு பயிற்சி




ஈரோடு மாநகரில்

செஞ்சோலை
நடத்திய

தற்சார்பு பொருட்கள் தயாரிப்பு பயிற்சி
ஈரோடு-நசியனூர் சாலையில் உள்ள 
ஸ்ரீ ஆனந்தம் மஹாலில்
சூன்-26 ஞாயிறு 
இனிதே நிறைவடைந்தது.

பயிற்சியில் 51பேர் கலந்து கொண்டனர்

ஸ்ரீ ஆனந்தம் மஹாலின் உரிமையாளர் திரு. சண்முகராஜன் ஐயா அவர்கள் செஞ்சோலை செயல்பாடுகளை பாராட்டி வாழ்த்தி பயிற்சியை துவங்கிவைத்தார்.

நமது பயிற்றுநர் திரு.மயில்சாமி.த,
ஸ்ரீ மயில் தற்சார்பு சந்தை அவர்கள் சிறப்பாக பயிற்சியளித்தார்.

நிகழ்வில்,
செஞ்சோலையின் நோக்கம் & செயல்பாடுகள்

சோப்பு என்றால் என்ன?

சோப்பின் பொருளாதார அரசியல் பின்னணி என்ன?

ஏன் வேண்டும் இயற்கை/தேங்காய் எண்ணெய் சோப்பு? 
என்பதை தெளிவாகவும் ஆழமான புரிதலுக்காகவும் கலந்துரையாடினார்.

செய்முறை பயிற்சியில்

இயற்கை சோப்பு
தேங்காய் எண்ணெய் சோப்பு
பாத்திரம் கழுவும் சோப்பு
துணி துவைக்கும் சோப்பு
MPL- Multi Purpose Liquid (Bio-enzyme)


விளக்க உரையில்:

மூலிகை தேநீர் பொடி
மூலிகை பல்பொடி
மூலிகை குளியல் பொடி
மூலிகை சீயக்காய் பொடி
முடி வளர்ச்சி எண்ணெய்
கண் மை
குங்குமம்
மின்சார தைலம்
இயற்கை முடி சாயம் (Natural Hair Dye)
விவரிக்கப்பட்டது.

அனைவருக்கும் காலை தேநீர்
இடைவேளையில் அருமையான 
கருவேப்பிலைகீர் பருகினர்

மதிய உணவாக

1. இனிப்பு அவுல் புட்டு
2. பீட்ருட் அல்வா
3. லெமன் அவுல் சாதம்
4. பசும் பெரியல்
5. அவுல் தயிர்சாதம்
6. முளைகட்டிய பயிர்
7. தேனுடன் பழக் கலவை 

என அடுப்பில்லா சமையல்முறையில் மிக எளிமையான மற்றும் அறுசுவையான உணவுகளை வேலூர் பிரபுசங்கர் அவர்கள் செய்து கொடுத்தார். வந்திருந்த அனைவரும் விரும்பி உண்டு மகிழ்ந்தனர். 

அந்தியூர்.செஞ்சோலையில் விளைந்த காய்கறிகள் விற்பனைக்கு வைக்கப்பட்டது.

தற்சார்பே விடுதலைக்கான வழி

செஞ்சோலையின் பயிற்சிகள் & செயல்பாடுகளை அறிந்து கொள்ள:

https://t.me/+0JiTJLZT9qhmZDU1

telegram குழுவிர் இணைந்து கொள்ளுங்கள்.

அழைக்க:

9361427747 
9944019149 

செஞ்சோலை இயற்கைவழி வேளாண் பயிற்சிப் பண்ணை,

சூலூர், கோவை மாவட்டம்.
&
அந்தியூர்,ஈரோடு மாவட்டம்.



See all posts!

Share & Spread:


create post



Do you like us? We help many business to growww. Let us talk!

Message us! we're ready to support your business

𖡼.𖤣𖥧𖡼.𖤣𖥧...𖡼.𖤣𖥧𖡼.𖤣𖥧


Place your orders here!

Proceed to Buy Order