Message Us! ➔

Blogs : All about Life and us!
இயற்கை களைக் கொல்லி தயாரித்தல்

இயற்கை களைக் கொல்லி தயாரித்தல்

தயாரிக்க தேவைப்படும் பொருட்கள் :

10 லிட்டர் - கோமியம்
2 கிலோ - எருக்கம் இலை
2 கிலோ - கல்உப்பு
1/2 கிலோ - சுண்ணாம்புக்கல்
(சுண்ணாம்பு பவுடரை சேர்க்கக்கூடாது)
தேவைகேற்ப எலுமிச்சை பழம்

செய்முறை:

எருக்கன் இலை 2 கிலோவை நன்றாக இடித்து அல்லது மிக்சியில் போட்டு அரைத்து அவற்றை கோமியத்தில் ஊற விடவும்.
பிறகு சுண்ணாம்புக் கல்லையும் அவற்றில் போட்டு ஊற விட வேண்டும்.
கல் உப்பை தூளாக்கி அவற்றுடன் கலந்து ஒரு வாரம் வரை ஊற வைக்கவும்.
ஒரு வாரத்தில் இயற்கை களைக் கொல்லி தயாராகி விடும்.

பயன்படுத்தும் முறை:
களைக் கொல்லி கரைசல் ஒரு லிட்டரை 9 லிட்டர் தண்ணீரில்
கலந்து களைகள் நன்கு நனையுமாறு தெளிக்க வேண்டும்.

தெளிக்கும் பொழுது ஒரு எலுமிச்சைப் பழத்தின்சாறு கலந்து தெளிக்கவும்.

பயன்கள் :
சிறிய களைகள் முதல் பெரிய களைகள் வரை நன்றாக காய்ந்து விடும்.
களைக் கொல்லி தெளிக்கும் பொழுது பயிர் சாகுபடி செய்திருந்தால் அவற்றின் மேல் படாதவாறு தெளிக்க வேண்டும்.
இது முற்றிலும் இயற்கையான களைக் கொல்லி.
செலவு குறைவு பலன் அதிகம்.
சுற்றுபுற சூழல் பாதுகாப்பானது.
குறிப்பாக இரசாயன களைக் கொல்லி மண்ணை மலடாக்கி விடும். இந்த களைக் கொல்லி மண் வளத்தைக் காக்கும்.



See all posts!

Share & Spread:


create post



Place your orders here!

Proceed to Buy Order