*விவசாயிகளின் கேள்வியும்,ஈஷா மண் காப்போம் இயக்கத்தின் பதிலும்*
*கேள்வி:*
கள்ளிப் பூச்சியை கட்டுப்படுத்த என்ன வழி ?
*பதில் :*
கள்ளிப் பூச்சிகளை பின்வரும் வழிவகைகளை பயன்படுத்தி கட்டுப்படுத்தலாம்.
கள்ளிப் பூச்சிகளைக் கட்டுப்படுத்த கலப்படமில்லாத 100 ml வேப்பெண்ணையைஒரு லிட்டர் தண்ணீருடன் சேர்த்து தெளிப்பான் மூலம் தெளிக்கலாம். வேப்பெண்ணை தெளிப்பதினால் இனப்பெருக்கத்தை கட்டுப்படுத்தலாம்.
மைதா மாவு கரைசல் :
ஒரு கைப்பிடி அளவு மைதா மாவை தண்ணீர் உடன் கலந்து தெளிப்பான் மூலம் தெளிக்கலாம்.
அரிசி களைந்த தண்ணீரை ஒரு நாள் ஊற வைத்து பின்பு தெளிப்பான் மூலம் பயன்படுத்தலாம்.
பிரண்டை மற்றும் சோற்றுக்கற்றாழை அரைத்த கலவை,அடுப்பு சாம்பல் ஒரு கைப்பிடி அளவு இவையிரண்டையும் புகையிலையை ஒரு மணி நேரம் ஊற வைத்த தண்ணீரில் கலந்து தெளிப்பான் மூலம் தெளிக்கலாம்.
வாட்ஸ் அப் குழுவில் இணைய*
https://rfr.budibase.app/app/whatsappgroup
8300093777
*நன்றி*
*ஈஷா மண் காப்போம் இயக்கம்*