Message Us! ➔

Blogs : All about Life and us!
*சிருமணி நிலக்கடலை விதைப்பு*

 

 *சிருமணி நிலக்கடலை விதைப்பு* 

 

சம்பா நெல் அறுவடைக்கு பிறகு, நெல் தாலடியை உழுது, சித்திரை பருவத்திற்க்கான - *(TMV 7) சிருமணி* வகை நிலக்கடலையை தற்போது விதைப்பு செய்துள்ளோம்...

விதைப்பு செய்து ஒரு வாரம் கடந்த நிலையில்! தற்போது (rain hose) தெளிப்பு நீர் பாசனம் மூலம் நீர் பாய்ச்சி வருகிறேன்...

அந்த நிலக்கடலையுடன் ஊடு பயிராக
வரப்பை சுற்றியும்,
இடையில் சாலை வடிவிலும் விதைத்துள்ளோம்.

 *பச்சை பயறு* 
 *தட்டை பயறு*
 *மக்காச்சோளம்*
மற்றும் கீரை வகைகளும்  விதைத்துள்ளோம்

 *விதைப்பு முறை* 

      " *நஞ்சைக்கு நாளு உழவு* 
     *புஞ்சைக்கு ஏழு உழவு* "

    " *அகல உழுகிறதை விட ஆழ உழு* "

                என்ற முன்னோர் வாக்கின்படி புழுதி உழவியல் முறையை கைய்யாண்டுள்ளோம்.

1) சம்பா நெல் அறுவடை முடிந்த தாலடி நிலத்தில் தொழுவுரம் (ஏக்கருக்கு 5டன் எரு இட்டு) பிறகு,
நீர் பாய்ச்சி 
 இயந்திர கலப்பை மூலம் முதல் உழவு செய்தோம்.

2) 20 நாட்கள் கழித்து (நிலத்தை ஓய்வு கொடுத்து) மீண்டும் நீர் பாய்ச்சினோம்.

3) அந்த ஈரப்பதத்தில் நிலத்தில் இருந்த தானிய மற்றும் களைச்செடி விதைகள் முளைத்த தருணத்தில் ஈரப்பதம் காய்வதற்க்குள் இரண்டாவது(ரொட்டவெட்டர் மூலம்) உழவு  செய்தோம்

5) அந்த ஈரப்பதத்திலேயே நிலக்கடலையை tractor இயந்திரம் மூலம்  விதைத்துவிட்டோம்.

இதில் மீண்டும் மீண்டும் நீர்பாய்ச்சி போக்கு முளைத்த பின் உழுது விதைப்பதால் களை கட்டுப்பாட்டு, மற்றும் நிலத்தின் ஆசுவாசமும் அடைகிறது. ( *இதில் ஒரு சிரு நுணுக்கமாக! நாம் விதைக்கும் விதைகள் முளைத்துவிடும் என்ற ஈரப்பதத்தில் தான் விதைக்க வேண்டும், செடி வெளிவந்த ஒரு வாரம் கழித்து நீர்பாய்ச்ச வேண்டும். அப்போது தான் களைச்செடிகளை கட்டுப்படுத்த முடியும், மண்ணின் பளெதீகமும் நீடிக்கும்* )

 *மற்றும்* 

     நீர்மேளான்மை அதனினும் அவசியம்!
தெளிப்பு நீர் முறையை கையாண்டால் மிகச்சிறப்பாக இருக்கும். இதில் அனைத்துமே கட்டுப்படும்.

**இருபொருட்கள்*

           விதைப்பதற்க்கு முன் வேப்பன் புண்ணாக்கு (ஹெக்டேர்/160கி) வீதமும், 
உயிர் உரங்களான (பாஸ்போ பாக்டீரியா, ரைசோபியம், சூடோமோனாஸ்) ஆகியவையும் தொழு எருவில் கலந்து விதைத்துள்ளோம். இவைகள் செடி நன்றாக வளரவும், வேர் அழுகல், பூஞ்ஞான் தாக்குதல்களை கட்டுப்படுத்தும்.

 " *தொடிப்புழுதி  கஃசா  உணக்கின் பிடித்தெருவும் வேண்டாது சாலப் படும்* "
        என்ற திருக்குறளின் கூற்றின்படி

   உழுது நன்கு காயவைத்து பின் நீர்பாய்ச்சி,விதைக்கும் விதையை விட மண்ணை சிரிய நுண்களாக உழுது பிறகு விதையை மண்ணில் விதைத்தால் அவை பட்ட பாட்டிற்க்கு நிச்சயமாக பலன் தரும் என்பதில் ஐயமில்லை.

  *குறிப்பு*
      
 நிலக்கடலையை கையால் உரித்து விதைத்துள்ளோம். பெரும்பாலான நேரங்களில் ஆட்கள் பற்றாக்குறை அல்லது அவசர நிலையில் இயந்திரத்தில் உடைத்து விதைக்கும் பொருட்டு முளைபுத்திறன் குன்றும்.

அதேபோல! விதையானது குறைந்து மூன்று மாதங்கள் உறங்கியதையே விதைக்க வேண்டும். அதுதான் மகசூலை கொடுக்கும்.

 

*Pandiya traditional farm*
*Gingee Arunpandiyan*
Melpappampadi 
Ginger taluk
9626788655



See all posts!

Share & Spread:


create post



Place your orders here!

Proceed to Buy Order