Message Us! ➔

Blogs : All about Life and us!
மலச்சிக்கல், மூலம் ஏன் ? எவ்வாறு குணமாக்குவது ? - டாக்டர் ஃபஸ்லுர் ரஹ்மான்

 

நம்முடைய உணவில் நன்மையும், தீமையும் கலந்திருக்கிறது. தூய்மையும், அசுத்தமும் கலந்திருக்கிறது; உடலுக்கு ஏற்புடையதும், விலக்கப்பட்டதும் நிச்சயமாக நம் உணவில் கலந்திருக்கின்றன. மனம் எந்த அளவுக்கு தூய்மையாக இருக்கின்றதோ, நன்மையான நிலையில் இருக்கின்றதோ, தீய குணங்களிலிருந்து விலகி இருக்கின்றதோ, அந்த அளவுக்கு உண்ணும் உணவின் தன்மையும், நன்மையும் மேலோங்குகிறது.

ஒருவன் பரீட்சைக்குப் போகிறான்; நன்றாக இருக்கக்கூடிய வயிறு கலக்குகிறது. பயத்தில் ஒருமுறைக்கு இரண்டு மூன்று முறையும் டாய்லெட் போகிறான். ஏன்இந்த நிலை ? மனதில் ஏற்படக்கூடிய கலக்கமும், பயமும் குடல்களிலும் பிரதிபலிக்கின்றன. உணவு நன்மையாக இருந்தபோதிலும் பதட்டத்தினால், குடல்கள் வலுவிழந்துவிடுகின்றன. அவையும் பதட்டமடைகின்றன. தன்னுள்இருக்கும் உணவை ஜீரணிக்காமல் வெளியேற்றுகின்றன. ஒரு பொருள் ஜீரணிக்கப்படும் தன்மையில் தான் அதன் நன்மைகள் நமக்குக் கிடைக்கின்றன. உணவில் உள்ள நச்சுக்கள் கூட ஜீரணத்திறன் நன்றாக இருக்கும் பட்சத்தில், அதன் விஷங்கள் முறியடிக்கப்படுகின்றன.

ஒரு மனிதனின் குணநலன்கள் எந்த அளவுக்கு முக்கியம் என்பதை நீங்கள் உணர்வதற்காக, உங்களுடைய மனதின் தியானத்திற்காகக் கொடுக்கப்பட்ட ஒரு சிறு உதாரணம்தான் இது. நீங்கள் அறியவேண்டும் உங்களுடைய உடல் உள்ளுறுப்புக்களுக்கு, உங்கள் உடலுக்கு எப்படி மனநிலை இருக்கிறதோ, அவ்விதமே உடல் உள்ளுறுப்புக்களுக்கும் மனநிலை உள்ளன. உங்கள் மனப்போராட்டங்கள் உடல் உறுப்புக்களிலும் போராட்டங்களாக இந்த உடல்உள்ளுறுப்புக்களின் போராட்டங்கள் தான் எண்ணற்ற ஆயிரக்கணக்கான நோய்களாக இன்று ஆங்கில மருத்துவத்தால் அறிமுகப்படுத்தப்படுகின்றன. அறிந்துகொள்ளுங்கள், இவை எதுவுமே உடல் நோய்களோ, உடல் உள்ளுறுப்புக்கள் சம்பந்தமான நோய்களோ அல்ல. மனதின் குணம் சம்பந்தப்பட்ட நோய்களாகும். டாக்டர்களிடம் நீங்கள் செல்வீர்களானால், அவர்கள் உங்களுடைய நோய்களைக் கண்டுபிடிப்பதாகக் கூறுவார்கள். அந்த நோய்களுக்கு பெயர்களும் வைப்பார்கள். ஆனாலும், எந்தவொரு நோயும், குணமாகாது. ஏனென்றால், அவர்கள் குணம் அடைவதற்கு மருந்தளிக்கவில்லை. அதாவது, எந்தவொரு மருந்தும் மனதில் குணத்தை மாற்றிவிடாது; சீராக்காது. மனநிலை சீரானால் தவிர, குணநலன்கள் கிடையாது. குணநலன்கள் இல்லாதவரையில் உடல்நலம் இல்லை என்பதை நீங்கள் தெளிவாக சிந்தித்துணர வேண்டும்.
வண்ட
மனம், குணங்கெட்டதன் காரணமாக, படபடக்குமானால், அவசரப்படுமானால், உங்களுடைய இருதயங்களும் படபடத்து, அவசரமாகத் துடிக்கும். நீங்கள் இருதய சிறப்பு சிகிச்சை மருத்துவரிடம் செல்வீர்கள். அவர்கள் இதற்கு ஒரு பெயர் வைப்பார்கள். மருந்து கொடுப்பார்கள். ஒருக்காலும் உங்களுடைய இருதய நோய்கள் தீராது. ஏன் நீங்கள் உணர்வதில்லை ? இவர்கள் டாக்டர்கள் அல்ல என்பதைத் தெளிவாக அறியக்கூடிய அவ்வளவு அத்தாட்சிகளும் உங்களுக்குள்ளும், உங்களுக்கு வெளியே சமுதாயத்திலும் ஏகப்பட்ட அத்தாட்சிகளை நீங்கள் தெளிவாகப் பார்க்கும் உங்களுக்கு நீங்களே அநியாயம் செய்து கொள்கிறீர்கள் என்பதை உங்களால் புரிய முடியவில்லையா ? அல்லது, புரிந்த நிலையில்தான் உங்களுடைய நன்மையைப் புறக்கணிக்கிறீர்களா?
உடல் உறுப்புக்களின் நோய்களுக்கு மனதின் சீர்குலைவே காரணம்; மற்றபடி, பாக்டீரியாக்களோ, வைரஸ்களோ, புழு பூச்சிகளோ ஒருக்காலும் காரணம் இல்லை. டாக்டர்கள் காரணங்கள் கண்டுபிடிப்பதற்காக அவர்கள் வைத்திருக்கும் பரிசோதனைக் கருவிகள் ஒவ்வொன்றும் அவர்களுடைய முட்டாள் தனத்தையும், மடத்தனத்தையும் மட்டுமே அறிவிக்கிறது என்பதை இதற்கு மேல் வெளிச்சம் போட்டுக் காட்ட முடியாது. நீங்கள் சிந்தித்து உணர வேண்டும். இது புரட்சிகரமான கருத்துக்களும் அல்ல. நம்முடைய தடம் புரண்டுவிட்ட வாழ்க்கையை நாம் சீர்தூக்கி மனதை நிலைப்படுத்திக்
கொள்வதில்தான் இருக்கிறது நம்முடைய உடல் சுகம்.

மனம் வெப்பமடைந்து, வெதும்பும் போது, உடல்சோர்வும், அசதியும் ஏற்படுகிறது. மனதின் வெப்பம் உடலிலும் பரவுகிறது. ஜூரத்தின் போது, நிகழக்கூடிய இந்த நிகழ்ச்சிகள் பாக்டீரியாக்களோ, மற்ற நுண்ணுயிர் கிருமிகளாலோ ஏற்படுகிறது என்று அறிவு கெட்டவர்கள் கூறுவார்கள். நீங்கள் அறியுங்கள், மனதின் வெப்பம் உடலில் பரவுகிறது என்பதை. இதற்கு டாக்டர்கள் கூறுவதை நீங்கள் பின்பற்றுவீர்களானால், இன்று மாறாக,
ஒவ்வொரு சிறிய ஜூரமும், குறுகிய காலத்தில் குணமாகக்கூடிய ஒவ்வொரு ஜூரமும் நாட்பட்ட ஜூரங்களாக இன்று ஆகிவிட்டதன் காரணம், உங்களுடைய மனதின் வெப்பத்தைத் தணிக்கக்கூடிய மருந்துகள் உங்களுக்கு இல்லை. எக்காலத்திலும் இதற்கான மருந்துகள் இருக்கப் போவதில்லை என்பதை நீங்கள் உணரவேண்டும். சாதாரண தும்மல் ஜூரம், சளி ஜூரமாக மாறியது. சாதாரண சளி ஜூரம் நிமோனியா ஜூரமாக மாறியது. பின்னர், அதுகாசநோய் ஜூரமாக அறிவிக்கப்பட்டது. பின்னர், அது கேன்ஸர் ஜூரமாக இன்று அறிவிக்கப்பட்டுக்கொண்டிருக்கிறது. இரத்தப் புற்றுநோய் ஏற்படும்பொழுது அந்த ஜூரம் கடைசி வரையில் நீங்காது.
இதற்கிடையில் நாட்பட்ட ஜூரங்களுக்கு மலேரியா ஜூரம், நாட்பட்ட மலேரியா ஜூரம், டைஃபாய்டு ஜூரம், பாரா டைஃபாய்டு ஜூரம், எய்ட்ஸ் ஜூரம், நீரிழிவு நோய் ஜூரம் என்று கிறுக்கர்களாக தாங்களும் ஆகி, நோயாளிகளையும் கிட்டத்தட்ட அரை பைத்தியங்கள் அளவுக்கு மனதை அலைகழித்து ? விரக்தியின் நிலைக்குக்கொண்டு வந்து, ஒவ்வொரு நோயாளியும் தாங்கள் ஏன் வாழ்கிறோம் என்ற விரக்தியில் தற்கொலை செய்துகொள்ளக்கூடிய முழு பைத்தியமாக ஆக்கிக் கொண்டிருக்கிறது நீங்கள் தெய்வம்போல் வணங்கி வழிபட்ட, ஏற்றுக்கொண்ட இந்த கேடுகெட்ட ஆங்கில மருத்துவம்.
ஜூரம் ஏற்படும்பொழுது, உடலிலும் அசதி ஏற்படும். உடல் உள்ளுறுப்புகளான இருதயங்கள், வயிறு, குடல், சிறுநீரகம், சிறுநீர்ப்பை, சிறுகுடல், பெருங்குடல், மலக்குடல் ஆகிய இவை யாவற்றிலும் அசதி  ஏற்படும். இது இவ்வுறுப்புக்களில் ஏற்பட்டுள்ள வெப்பத்தின் காரணமாக

அதாவது ஜூரத்தின் காரணமாக ஏற்பட்டுள்ள அசதியும், இயக்கத்திறன் குறைவுமாகும். இதன் காரணமாக, மலம் உருவாகவும் நாள் பிடிக்கும்.
உருவாகிய மலம் வெளியேறுவதற்கும் நாள் பிடிக்கும். ஏனென்றால், ஜீரணம் ஆகாமல், உணவு வெளியேற்றப்படக்கூடாது. உணவில் உள்ள சக்திகள் விரயமாக்கப்படக்கூடாது. இயற்கை விதிகளுக்கு ஏற்ப உடல் உள்ளுறுப்புக்கள் செயல்படவேண்டுமே தவிர, உங்களுடைய நேரக் கணக்குப்படி அது செயல்படாது.
எப்படி அவசரம், பயம் போன்ற மனநிலைகள் காரணமாக உணவுப் பொருட்கள் குடலினுள் அதே மனநிலையால் அதிர்ச்சிக்கப்படும் பொழுது, முறைகெட்ட ஜீரணம் நிகழ்ந்து, உணவுப் பொருள்களிலிருந்து ஊட்டச் சத்துக்குபதிலாக, நச்சுச்சத்துக்கள் வெளியேறி அதன்காரணமாக, வேகமான இயக்கத்தின் ஒருசில மணி நேரத்திற்குள்ளாக நான்கைந்து முறைகள் கூடபேதியாக வெளியேறி விடுகிறதோ, அதைப் போன்றே இயக்கக் குறைவின் போது, ஜூரத்தின் காரணமாக ஏற்பட்டுள்ள அசதியின் போது, ஜீரணமே ஆகாமல் இருக்கக்கூடிய உணவிலிருந்து ஜீரணம் முழுமையாக நடந்து முடியும் வரை மலம் உருவாகாது; மலம் வெளியேறவும் செய்யாது. இது மலச்சிக்கல் அல்ல; இயற்கையின் தெளிவான, முறையான உடல் உள்ளுறுப்புக்களின் இயக்கமாகும்.

இப்பொழுது நாம் அறிய வேண்டியது என்னவென்றால், நம் மனநிலை எப்பொழுதும் குளிர்ச்சித்தன்மை பொருந்தியதாக இருக்க வேண்டும். அதிலிருந்து இயற்கையினுடைய அளவுக்குத் தகுந்த வெப்ப சக்தி தானாக உருவாக வேண்டும். ஒரு மனிதனுக்கு நெருப்புத் தன்மை கொண்ட குணம் எப்பொழுது உருவாகிறது என்றால், பிறரை விட 'தான் அதிகமானவன்!' என்ற அகப்பெருமை கொள்ளும்பொழுது தான். இதில் இரண்டு வகைகளில் நம்முடைய குணம் பாதிப்படைகிறது. ஒன்று அகப்பெருமையில் வெப்பம் அதிகமாகி, குளிர்ச்சித்தன்மையை வெதும்ப வைக்கிறது. மற்றொன்று, குளிர்ச்சித் தன்மையிலிருந்து வெப்பம் அதிகமாக மாற்றப்படுவதன் காரணமாக நீரற்றுப்போய் விடுகிறது. இந்த இரண்டு வகையினமே வெப்ப மிகுதி வெதும்புகிறது. உள்ளுறுப்புக்களுக்குள்ளும் அவ்விதமாகவே.

குடல் உள்ளுறுப்புக்களில் ஒன்றான குடல்வால் வெம்பி, வெந்து சீழும், கெட்ட நீரும் கோர்த்து, அப்பெண்டிசைட்டிஸ் என்ற குடல்வால் நோயாக உருவாகுவதை நீங்கள் பார்த்து இருக்கிறீர்கள். இதற்கு மருந்துகளோ, மாத்திரைகளோ நிச்சயமாக கிடையாது. ஆபரேஷன் செய்து வெட்டி எடுப்பதைத் தவிர வழியில்லை என்று ஆங்கில மருத்துவம் கூறும். ஆனாலும், இதுவல்லாத அழகான வழியுண்டு. மனதின் தன்மையை சீரடைய வைப்பதுதான். மனதின் வெப்பத்தை குளிர்ச்சியடையச் செய்வதுதான். குடல்வால் நோயால் அவதியுறும் சமயம் வெம்பியிருக்கக் கூடிய மனதிற்கு குணமாகிவிடும் என்ற குளிர்ச்சியான செய்தியும், அதன் மீது நம்பிக்கை கொள்ளக்கூடிய குணமார்ந்த பேச்சம் அதை உறுதிப் படுத்தக்கூடிய ஞானங்களைக் கொண்ட அணுகுமுறையும் ஒன்று சேருமானால், அப்பெண்டிசைட்டிஸ் என்ற குடல்வால் நோய் அங்கு குணமாவது நிச்சயம். மனதின் குணமடைதலில் தான் உடலின் சுகம் அமையப் பெற்றிருக்கிறது என்பதை நீங்கள் உணரவேண்டும்.
ஒருமனிதன் நோய்வாய்ப்பட்டிருக்கும் பொழுது, சுகமடையுங்கள் என்று நாம் ஆசீர்வாதம் செய்வதில்லை. மாறாக, நீங்கள் குணமடைய நான் பிரார்த்திக்கின்றேன் என்றுதான் கூறுகிறோம். நமக்கும், நம் மனதிற்கும் இடையே ஆட்சி புரிபவன் இறைவனைத் தவிர வேறு ஒருவரும் இல்லை. சுகம் பெற வாழ்த்துவது பெருமை கொண்ட எந்த ஒருவனின் வெறும் கூற்றாகும். ஆனால், நீங்கள் குணமடைய வேண்டி பிரார்த்திக்கின்றேன் என்ற சொல் யாவருக்குமே ஆதரவும், ஆறுதலும் அளிக்கக்கூடிய பேச்சாகும். நிச்சயமாக, மனம் நிம்மதியும், அமைதியும் அடையும். எனவே, மனதின் தன்மையை அதன் குளிர்ச்சியை நாம்பேணிக் கொள்வதில் இருக்கிறது, நாம் நோய்களிலிருந்து குணமடைவதும். இன்னும், நம் குணங்களைப் பாதுகாத்துக்கொள்வதன் காரணமாக, இனியும்
வாழ்க்கையில் சோதனைகளிலிருந்தும், வேதனைகளிலிருந்தும் நம்மைப்
பாதுகாத்துக் கொள்ள முடியும்.

மலச்சிக்கல் என்பது பலவிதங்களில் தவறாகப் புரிந்து கொள்ளப்படுகிறது. ஒவ்வொரு நாளும் மலம் கழிக்க வேண்டும் என்ற அறிவு தவறானது. கழிவு ஏற்படுமானால், மலம் உருவாகிறது. தூய்மையான உணவில் கழிவு மிகுதியாக இருக்காது. தூய்மையான மனநிலையைக் கொண்டு உண்ணும் உணவிலிருந்தும் கழிவுகள் அதிகமாக உருவாகாது. மனித அறிவைக் கொண்டு ஒருநாள் மலஜலம் கழிக்கவில்லையென்றால் ஏதோ பறிபோய்விட்டதைப் போன்று வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். மலம் கழிக்க வேண்டும் என்ற உணர்வே இருக்காது. அந்த அளவுக்கு வயிறு கலகலப்பாக இருக்கும். ஆனால், மலம் கழித்தே ஆகவேண்டும் என்ற இவர்கள் முக்கிக்கொண்டு உட்கார்ந்திருப்பார்கள், மணிக்கணக்கில். இது மிகத்தவறான போக்காகும். இயற்கைக்கு மிக துரோகமான, மனநிலையை பாதிக்கக்கூடிய தனக்குத்தானே செய்யக்கூடிய அநியாயமாகும். வீணாக மனதின் குணத்தில் விரக்தியை உண்டாக்கி, அதிருப்தியை நிலை கொள்ளச் செய்வதாகும். மனதின் குணநலன் இப்பொழுது மாறிவிட்டது. குளிர்ச்சிக்குப் பதிலாக வெப்பம் அதிகமாகிறது. குடலின் முறையாக இயங்கிக் கொண்டிருக்கக்கூடிய ஜீரணத்திறன் அதே வெப்பமிகுதியை அடைகிறது. குடலில் உள்ள நீர்ச்சத்துக்கள் ஆவியாகின்றன.இதுவே வாயுக்களின் ஆரம்பம். இந்த வாய்வும் வெப்பத்தன்மை வாய்ந்ததாகும். மலஜலம் உருவாகிவிட்டால், எந்த அளவுக்கு வயிற்றை அடைக்குமோ, அந்த அளவுக்கு வாய்வு வயிற்றை அடைத்துக் கொண்டு, குடல்களையும், வயிறையும் பலூன்போல பெரிதாக்கி, உப்பிவிடச் செய்கிறது.
பொதுவாக, நாம் எண்ணிக்கொண்டிருக்கின்றோம், உணவு ஜீரணமாகாததன் காரணமாக வாய்வுத் தொந்தரவுகள் அதிகமாகின்றன என்று. உண்மை, ஆனால், ஜீரணத்தன்மையின் குறைவுக்குக் காரணம் என்ன என்பதில்தான் தவறாகக் கொள்ளப்பட்டு விடுகிறது. இதுவரையில் படித்து வந்ததைப் போன்று இப்பொழுது நீங்கள் நிச்சயமாக அறிவீர்கள். குடல்களின் வெப்பம் மிகுதியின் காரணமாகவே, குடலின் ஜீரணத்திறன் குறைந்துள்ளது என்று. இந்த வெப்பம் பெருங்குடலுக்குள் இறங்கும் பொழுது, அங்குள்ள இரத்தக் குழாய்களை விரிவடையச் செய்கிறது. பெருங்குடலின் உட்புறச் சுவற்றில் புண்களும் உருவாகின்றன. நாளடைவில் இவை கேன்ஸர் புற்றுநோயாக மாறும். அதற்கு முன்பாக அடிக்கடி திடீரென வயிற்று வலியுடன், நாட்கணக்கில் சீதமும், கொஞ்சம் கொஞ்சமாக பேதியாவதும் பெரும் தொந்தரவாக இருக்கும். குடல் வெப்பத்தின் காரணமாக, நீர்வற்றிப் போய் மலம் வறண்டு விடுகிறது. எனவே, மலம் பெருங்குடலிலிருந்து மலக்குடலுக்குள் இறங்குவதிலும் சிரமம் ஏற்படும். இதனையே மலச்சிக்கல் என்று கூறுகிறார்கள். ஆனால், அதன் காரணத்தை மறந்து விடுகிறார்கள். எனவே, நோய்க்கு பெயர் வைப்பதை நீங்கள் முதலில் விட்டுவிட வேண்டும் ஒருவருக்கு என்ன பிரச்சினை என்பதை மட்டுமே கவனித்துக் கேளுங்கள். அங்குதான் உங்களுக்கு அவற்றின் காரணமும், அவற்றை நிவாரணப் படுத்தக்கூடிய ஞானமிக்க வழிமுறைகளும் தெளிவாகும்.
மலக்குடலில் இருக்கக்கூடிய நீர் வெப்பமாக மாறி, வெப்பக்காற்றாகக் குடலை அடைத்துக் கொண்டிருக்கிறது. அது மலம் இருப்பதைப் போன்ற ஒரு உணர்வை ஏற்படுத்துகிறது. மலம் கழிக்க முயன்றால் வெறும் காற்று மட்டுமே பிரியும். காற்றுக்கு மேலே பெருங்குடலை விட்டு மலக்குடலுக்குள் இறங்காமல் பின்தங்கியே இருக்கிறது. அங்கும் சிறிதளவு மட்டுமே மலம் துண்டாக நிற்கும். அதற்கும் மேலே காற்று அடைத்துக் கொண்டிருக்கும். இப்படியாக சிறுசிறு துண்டங்களாக மலமும், அவற்றுக்கிடையே காற்றுப் பகுதியும் வயிற்றை அடைத்துக் கொண்டு மலம் முழுமையாகக் கழிக்க முடியாமல், படிப்படியாக காற்றும், மலமும் மாறிமாறி வெளியேற்றப் படுவதற்குள்ளாக மணிக்கணக்கில் உட்கார்ந்திருக்க வேண்டியதாக இருக்கும். அப்பொழுதுகூட முழுமையான திருப்தி இருக்காது. எவர் ஒருவர்  மலஜலம் முழுமையாக கழிக்க முடியவில்லை என்று இருக்கிறாரோ, அவருடைய மிக முக்கியமான பிரச்சினை, குடலில் இருக்கக்கூடிய வெப்ப மிகுதியைத் தவிர வேறு எதுவும் இல்லை.

வெப்பம் கீழ் இறங்கும் பொழுது, அதற்கு மலத்தை வெளியாக்கக் கூடிய உந்தும் சக்தி கிடையாது. ஆனால், முழுமையாக மலம் வெளியேறக் கூடிய உணர்வை மட்டும் ஏற்படுத்தும். எனவே, பெரும்பாலானோர் அதிகப்படியாக முக்கி வெளியேற்ற வேண்டியதாக இருக்கும். இந்த நிலையின்போது, வெப்பக் காற்றானது ஏற்கனவே வெப்பத்தின் காரணமாக விரிவடையச் செய்திருக்கும் மலக்குடலின் இரத்த நாளங்களினுள் ஊடுருவுகிறது. இது மிகக்கெட்ட காற்றாகும். இரத்தமும், கெட்ட காற்றும் அங்கு கலந்து உபத்திரவமாக மாறுகிறது. இது மூல உபத்திரவம் ஆகும். ஒவ்வொரு முறையும் பெரும் பிரயத்தனத்துடன் இவ்விதமாக மலம் கழிக்கும் பொழுது, ஆசன வாயின் வெளிப்புறம் அந்த வெப்பக் காற்றானது இரத்த நாளத்தையும் சேர்த்து புடைத்துக் கொண்டு, பலூன் போன்று வெளியில் தள்ளும். ஒவ்வொரு முறையும் இவ்விதமாக ஆசன வாயின் வெளிப்புறமாக, இரத்த நாளங்கள், புடைத்துத் தள்ளும் பொழுது, கடுமையான வலியை ஏற்படுத்தும். அந்த வீக்கத்தினுள் இருக்கும் வெப்பக்காற்றானது உள்ளே இருக்கும் அழுத்தத்தின் காரணமாக கெட்ட வெப்ப நீர்ச் சக்தியாக மாறி, இரத்தத்துடன் கலந்து திரவமான ஒருவகை சீழாக மாறுகிறது. இது வெடித்து சீழும், இரத்தமுமாக வெளியேறாத வரையில் வலி குறையாது. நடக்கும் போதும், உட்காரும் போதும் அழுத்தத்தின் காரணமாக அடிக்கடி இந்த வீக்கம் பெரிதாவதும், கசிந்து கொண்டே இருப்பதுமாகவும் வாழ்நாள் முழுக்க தொல்லை கொடுக்கும்.

வாசகர்களே, எந்தக் காலத்திலும் மலச்சிக்கல் காரணமாகவோ, உபத்திரவத்தின் காரணமாகவோ, நீங்கள் ஒருபோதும் துன்பத்திற்குள்ளாகக் கூடாது. இந்தக் கட்டுரையின் நோக்கமும் அதுதான். நீங்கள் செய்ய வேண்டியது, கடைபிடிக்க வேண்டியது என்ன ? உங்களுக்கு மலஜலம் கழிக்க வேண்டிய உணர்வு முழுமையாக ஏற்படாத வரையில் முறை வைத்துக் கொண்டு இந்தநேரத்தில் ஒவ்வொரு நாளும் காலைக் கடன்களை முடித்துக் கொள்ள வேண்டும் என்று கொள்ளக்கூடாது. மலம் கழிக்க உட்கார்ந்து விட்டால், வெகுவாக முக்குவதை இன்று முதலாகத் தவிர்த்துக் கொள்ளுங்கள். மலம் தானாக வெளியேறும். ஒரு சிறிய முயற்சிக்கு மேலாக முக்குவது என்பது மலச்சிக்கல் துன்பத்தை அதிகரிக்கும். பத்து அல்லது பதினைந்து நிமிடங்களுக்கு மேலாக உட்கார்ந்து கொண்டிருக்கவேண்டாம். மீண்டும் மலம் கழிக்க வேண்டிய அழகான உணர்வு முழுமையாக ஏற்பட்டால், திரும்பச் சென்று
கொள்ளுங்கள். இதை நீங்கள் பின்பற்றுவீர்களானால், யாருக்கெல்லாம் இந்த உபத்திரவம் இருக்கிறதோ, அவர்களுக்கு நாளடைவில் மலச்சிக்ல் என்ற ஒருநோயே இல்லாமல் ஆகும். மூலம், உபத்திரவம் போன்ற நோய்கள் குணமாவதையும் நீங்கள் அறிவீர்கள். மலம் தானாக வெளியேறுவதை நீங்கள் அறியும் போது, உங்களிடம் இருக்கக்கூடிய பயமும், பதற்றமும் உங்களை விட்டும் நீங்கும். இந்த மனநிலையை நீங்கள் கவனிக்க வேண்டி பயம், பதற்றமும் இரண்டு கெட்ட குணங்களாகும். உங்களை அறியாமலேயே இந்த கெட்ட குணங்களை விட்டும் குணமடைவீர்கள். எந்தவொரு காரியத்திலும் நாம் அவசரத்தை மேற்கொள்ளாமல் இயற்கையின் போக்கில் நம்மை ஈடுபடுத்திக் கொள்வோமேயானால் முறையான வாழ்க்கை தானே அமையும். பயத்திலிருந்தும், பதற்றத்திலிருந்தும் நம்மை பாதுகாத்துக் கொள்ளும் பொழுது, இருதயம் குளிர்ச்சியடைகிறது. அதனுடைய வெப்பத்தன்மை நீங்குகிறது. உடல் முழுமையிலும் இந்த குளிர்ச்சித் தன்மை பரவும் பொழுது, உடல் உள்ளுறுப்புக்களிலும் பரவும் இக்குளிர்ச்சி குடலினுள் உள்ள வெப்பத் தன்மை அந்தக் கணமே நீங்குகிறது. குடலினுள் உள்ள வெப்பக் காற்றும் உடனடியாக குளிர்ந்து, திரவமாக மாறுகிறது. வறண்டு போயிருந்த மலம் நீர்ச்சத்து திரும்புவதன் காரணமாக, இலகுவாகவும், சிரமமின்றியும் வெளியேறுகிறது. இதுவே மலஜலம் கழிக்கும் முறையாகும். இதனை நீங்கள் சற்று சிரத்தையுடன் சிரமம் பார்க்காமல் ஓரிரு நாட்களுக்குப் பின்பற்றுங்கள். வாழ்நாள் முழுவதும் பட்ட துன்பங்கள் நீங்கி விடும். மலச்சிக்கல், மூலம், வாய்வுத் தொல்லை, உபத்திரவம் போன்ற அனைத்திலிருந்தும் இன்று முதலாக சுகம் பெறுங்கள்.



See all posts!

Share & Spread:


create post



Do you like us? We help many business to growww. Let us talk!

Message us! we're ready to support your business

𖡼.𖤣𖥧𖡼.𖤣𖥧...𖡼.𖤣𖥧𖡼.𖤣𖥧


Place your orders here!

Proceed to Buy Order