Message Us! ➔

Blogs : All about Life and us!
பழமொழிகள்

#பழமொழிகள்

 *தவளை கத்தினால் தானே  மழை
*அந்தி ஈசல் பூத்தால் அடை மழைக்கு அச்சாராம் 
*தும்பி பறந்தால் தூரத்தில் மழை
*எறும்பு ஏறில் பெரும் புயல் 
*மார்கழி மழை மண்ணுக்கு உதவாது 
*தை மழை நெய் மழை
*மாசிப்பனி மச்சையும் துளைக்கும் 
*தையும் மாசியும் வீடு மேய்த்து உறங்கு
*புத்துகண்டு கிணறு  வெட்டு
*வெள்ளமே ஆனாலும் பள்ளத்தே பயிர்செய் 
*காணி தேடினும் கரிசல்மண் தேடு
*களர் கெட பிரண்டையைப் புதை 
*கெட்ட நிலத்துக்கு எட்டு வன்னி  கெட்டகுடும்பத்துக்கு எட்டு வெள்ளாடு 
*நன்னிலம் கொழுஞ்சி நடுநிலம் கரந்தை கடைநிலம் எருக்கு
*நீரும் நிலமும் இருந்தாலும் பருவம் பார்த்து பயிர் செய் 
* ஆடிப்பட்டம் பயிர் செய் 
*விண் பொய்த்தால் மண் பொய்க்கும்
*மழையடி புஞ்சை மதகடி நஞ்சை 
*களரை நம்பி கெட்டவனும் இல்லை மணலை நம்பி வாழ்ந்தவனும் இல்லை
* உழவில்லாத நிலமும் மிளகில்லாத கறியும் வழ வழ 
*அகல உழவதைவிட ஆழ உழுவது மேல் 
*புஞ்சைக்கு நாலுஉழவு நஞ்சைக்கு ஏழு உழவு 
*குப்பை இல்லாத வெள்ளாமை சப்பை
*ஆடுபயிர் காட்டும் ஆவாரை கதிர் கட்டும் 
*கூளம் பரப்பி கோமியம் சேர் 
*ஆற்று வண்டல் தேற்றும் பயிரை 
*நிலத்தில் எழுத்த பூண்டு நிலத்தில் மடிய வேண்டும்
*காய்ச்சலும் பாய்ச்சலும் வேண்டும்
*தேங்கி கெட்டது நிலம் தேங்காமல் கெட்டது குளம்
*கோரையை கொல்ல கொள்ளுப்பயிர் விதை  
*சொத்தைப்போல் விதையை பேனவேண்டும்
*விதை பாதி வேலை பாதி
*காய்த்த வித்திற்கு பழுதில்லை 
*பாழில் போட்டாலும் பட்டத்தில் போடு
*கோப்பு தப்பினால் குப்பையும் பயிராகாது 
*ஆடி ஐந்தில் விதைத்த விதையும் புரட்டாசி பதினைந்தில் நட்ட நடவும் பெரியோர்கள் வைத்த தனம் 
*கலக்க விதைத்தால் களஞ்சியம் நிறையும் அடர விதைத்தால் போர் உயரும் 
*விதைகள் ஆழப் புதைப்பது பழுதாம்
ஆயிரம்  கால பயிர் நெல்லுக்கு ஒரு அந்து  

தொகுத்தவர் : Thangakannan



See all posts!

Share & Spread:


create post



Do you like us? We help many business to growww. Let us talk!

Message us! we're ready to support your business

𖡼.𖤣𖥧𖡼.𖤣𖥧...𖡼.𖤣𖥧𖡼.𖤣𖥧


Place your orders here!

Proceed to Buy Order