Message Us! ➔

Blogs : All about Life and us!
ரணகள்ளி மூலிகை சிறுநீரக கற்களை கரைக்க எப்படி பயன்படுத்துவது?

ரணகள்ளி மூலிகை சிறுநீரக கற்களை கரைக்க எப்படி பயன்படுத்துவது?

வெட்டி போட்டா குட்டி போடும்...


ரணகள்ளி மூலிகை

ரணகள்ளி செடியை நாம் வளர்ப்பது சுலபம் இதனை நாம் பயன் படுத்துவதும் சுலபம் இதன் இலைகளை சாப்பிட்டால் போதும் அது ஒரு மாபெரும் அருமருந்தாகும் நமக்கு பெரும் செலவு வைக்ககூடிய வயிற்றில் ஏற்படும் கல்லை இது கரைத்துவிடும் அதைப்பற்றி பார்ப்போம்.

ரணகள்ளி ஓர் செடி வகையை சார்ந்த தாவரம், இலைகள் நீள்  வட்ட வடிவில் நீர் பற்று அதிகமாக காணப்படும். இலைகளின் விளிம்புகள் வளைவுகளாக காணப்படும். இது ஓர்விதையற்ற தாவரம், இதன் இலைகளின் விளிம்புகளில் இருந்து புதிய கன்றுகள் வளர்வதை காணலாம். 

சிறுநீரக கற்களை கரைக்க இந்த  மூலிகை செடியின் இலை பயன்படுத்தப்படுகிறது.

 சிறுநீரகத்தில் உருவகும் எவ்வளவு பெரிய கற்களையும் மிக எளிதில் கரைத்து துகள்கலாக  சிறுநீர் கழிக்கும் போது எவ்வித வலியும்மின்றி வெளியேற்றுகிறது.
 
ரணகள்ளி  மூலிகையை எப்படி பயன்படுத்துவது என்பதை பார்ப்போம்.

ரணகள்ளி செடியை மண்ணில் இருந்து பிடிங்கி எடுக்க வேண்டாம். உயிருடன் இருக்கும் செடியின் இளந்தழையில் இருந்து சாப்பிட வேண்டும், அதாவது முதல் நாள் அன்று செடியில் உள்ள மிகச் சிறிய இலையில் ஆரம்பித்து பெரிய இலைகள் வரை 7 நாட்கள் வரை மட்டும் சாப்பிட்டு வர சிறுநீரக கல் இருந்த இடம் தெரியாமல் மறைந்துவிடும்.

ரணகள்ளி இலைகள் எப்படி தேர்வு செய்து சாப்பிடுவது என்று பார்ப்போம். 

ரணகள்ளி இலைகளை  7 நாட்கள் மட்டும் சாப்பிட்டு வர நோய் பூரண குணம் அடையும். முதல் நாள் மிகச்சிறிய இலையில் இருந்து தான் சாப்பிட ஆரம்பிக்க வேண்டும். அடுத்த நாள் சற்று பெரிய இலை, அதற்க்கு அடுத்த நாள் அதைவிட சற்று பெரியது இப்படி படி படியாகதான் சாப்பிட வேண்டும்.

உணவு பத்தியம் உண்டு:-

பாலும் பால் சார்ந்த பொருட்களையும், இறைச்சி, மீன்முட்டை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும்.
 

 நன்றி !!

வாழ்க வளமுடன் இதுவொரு மீள் பதிவு
கோ நம்மாழ்வார் உணவுக்காடு திருநெல்வேலி மாவட்டம்




See all posts!

Share & Spread:


create post



Place your orders here!

Proceed to Buy Order