வள்ளலார் மூலிகைகள் பொடிகள்

வள்ளலார் மூலிகைகள் பொடிகள்

Exclusive Store for மூலிகைகள், இயற்கை பொருட்கள்

Home

Products

Share & Spread:

Products:

Herbal Tea (Mooligai Theneer Podi)

Sree Mayil Tharcharbu Santhai

மூலிகை தேநீர் போடி Herbal Tea (Mooligai Theneer Podi)

herbals

சிறப்புகள் :

மூலிகை தேநீர் என்பது பண்டைய காலத்தில் இருந்தே பயன்பாட்டில் உள்ளது ஆனால் இன்று பாலை பயன்படுத்தி டீ, காபி என தினசரி உட்கொள்வதன் மூலம் இன்று செரிமான மண்டலம் பாதித்து இதன் விளைவாக எடை அதிகரிப்பு, பசியின்மை, அஜீரணம், மூட்டு தேய்மானம் என பல பிரச்சினைகளுக்கு உள்ளாகின்றன. அக்காலத்தில் குடிநீரை மட்டும் பயன்படுத்தி அதனுடன் நாட்டு கொத்தமல்லி, சுக்கு மேலும் அதனுடன் உப மூலிகையை சேர்த்து சுவைக்கு கருப்பட்டியை பயன்படுத்தி நல்ல நறுமணத்துடன் தேநீர் பருகி வந்தனர் இதன் வரிசையில் இக்காலத்திற்கு ஏற்றவாறு அனைவரும் விரும்பும் சுவையுடன், தரமான ஜீரணம் மற்றும் இரத்தத்தை சுத்திகரிப்பு செய்யும் வகையிலும் இந்த மூலிகை தேநீர் சிறப்பாக செயல்படும்.

பொருட்கள்:
1. சுக்கு
2. கொத்தமல்லி விதை
3. சீரகம்
4. மிளகு
5. அமுக்குரா சூரணம்
6. சித்தரத்தை
7. துளசி
8. தூதுவளை
9. ஏலக்காய்
10. பதிமுகம்

உபயோகிக்கும் முறை:

  •  ஒரு பாத்திரத்தில் 1 லிட்டர் அளவிற்கு (4 நபர்களுக்கு) தண்ணீரை மிதமான சூட்டில் காய்ச்சவும்.
  •  தண்ணீர் கொதி நிலைக்கு வருவதற்கு முன்பாக மூலிகை தேநீர் பொடியை இரண்டு டீஸ்பூன் அளவிற்கு சேர்த்து 3 - 5 நிமிடங்கள் நன்கு கொதிவிட்டு இறக்கி விடவும்.
  •  இந்தத் தேநீரை வடிகட்டியும் அல்லது வடி கட்டாமலும் பருகலாம்
  •  சுவைக்கு ஏற்ப நாட்டு சர்க்கரை/கருப்பட்டி/பனங்கற்கண்டு சேர்த்து கொள்ளலாம்
  •  தினசரி காலை அல்லது மாலை பருகி வர உடல் நலம் மேம்படும்


பயன்கள்:
நீரிழிவு நோய் வராமல் தடுக்கிறது, இரத்தத்தை சுத்திகரிக்கிறது, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது, செரிமான மண்டலத்தை வலுப்படுத்துவதுடன் வயிற்றில் ஏற்படும் பிரச்சனைகளை தடுக்கிறது.

குறிப்பு:
இந்த மூலிகை தேநீரை பயன்படுத்திய பிறகு பாலை கொண்டு தயாரிக்கப்படும் டீ, காபி  போன்றவற்றை தவிர்த்து விடவும்.

.



Events

Posts

Contact us:
📞 +91 8110033336

...