Tranavam Natural Products

Tranavam Natural Products

Spiritual, Organic and Lifestyle

Home

Our Produces

Share & Spread:

Products:

 

பொதுவாக நம் மரபில் இது போன்ற ஊட்டச்சத்து நிறைந்த உணவு பொருட்களை பயன்பாட்டில் வருவதற்கான காரணங்கள்:

◆ சத்து குறைபாட்டை சரி செய்ய

◆ இழந்த வலுவை (உடல் ரீதியாக பாதிப்பை அடைந்தவர்கள்) மீண்டும் திரும்பிட

◆ மருத்துவம் தொடர்பாக

குறிப்பாக தானியங்களை சேர்க்க படும் போது, எதை சேர்க்க வேண்டும், அதன் விகிதம் போன்றவற்றை அவசியம் தெளிவு படுத்தி கொள்ள வேண்டும். காரணம் வாய்வு தொடர்பான பயிறு மற்றும் பருப்பு வகைகளில் பங்கு சற்று கூடுதலாக இருப்பதால், இதை சரி செய்ய மற்ற துணை பொருட்களை சேர்த்து சமன் செய்ய வேண்டும்.

                 உட்பொருள்கள்:
    அ. முளைக்கட்டிய பொருட்கள்:

1. கேழ்வரகு
2. நாட்டுக்கம்பு 
3. வெள்ளைச் சோளம் 
4. சிவப்பு சோளம் 
5. மக்கா சோளம் 
6. பாசிப்பயறு
7. சிவப்பு கொள்ளு 
8. கருப்பு கொள்ளு 
9. கருப்பு சோயா 
10. வெள்ளை சோயா
11. சிவப்பு சோயா
12. கருப்பு உளுந்து
13. சம்பா கோதுமை 
14. நிலக்கடலை
15. நரிப்பயறு
16. கருப்பு கொண்டை கடலை
17. நாட்டு துவரை 
18. காராமணி

    ஆ. முளை கட்டாத பொருட்கள்:
19. வெள்ளை எள் 
20. கசகசா 
21. பொட்டுக்கடலை
22. ஜவ்வரிசி
23. மாப்பிள்ளை சம்பா அவுல்
24. பனங்கிழங்கு

          இ. கொட்டை வகைகள்:
25. முந்திரி
26. பாதாம்
27. பிஸ்தா 
28. சாரப்பருப்பு

         ஈ. வாசனை பொருட்கள்:
29. ஓமம்
30. சுக்கு
31. ஏலக்காய்

   உ. பாரம்பரிய அரிசி வகைகள்:
32. மாப்பிள்ளை சம்பா 
33. தங்க சம்பா
34. கருப்பு கவுணி 
35. காட்டுயானம்
36. கருங்குருவை
37. காலாநமக்
38. பூங்கார்
39. குள்ளகார்
40. சிவப்பு அரிசி
41. மூங்கில் அரிசி
42. திணை
43. வரகு 
44. குதிரைவாலி 
45. சாமை
46. பார்லி

        ஊ. மூலிகை பொருட்கள்:
47. ஜாதிக்காய்
48. மாசிக்காய்
49. அமுக்கிரா கிழங்கு 
50. அதிமதுரம்


செய்முறை:
1. ஒரு நபருக்கு இரண்டு தம்ளர் தண்ணீர் வீதத்தில் இரண்டு தேக்கரண்டி மாவு வீதம் தண்ணீரில் நன்றாக கரைத்து கொள்ள வேண்டும்.

2. நன்கு கட்டி ஏதும் இல்லாதபடி கரைத்த பிறகு அடுப்பில் மிதமான சூட்டில் வைத்து நன்றாக கிண்டியபடி செயல் பட வேண்டும்.

3. சில நிமிடங்கள் கழித்து இவ்வாறு கிண்டி வர கூழ் பதத்தை அடைந்தவுடன் இறக்கி விடவும்.

4. இத்துடன் துருவிய தேங்காய் சிறிது அளவு சேர்த்து கொண்டால் மிகவும் சுவையாக இருக்கும்.

5. அவரவர் விருப்பப்படி இனிப்பு அல்லது உப்பு சேர்த்து பருகலாம்.

குறிப்பு:
✓ தானியங்களை காய வைத்து, வறுத்து, கல் இயந்திரம் மூலம் அரைக்கப்படுவதால் 5 மாதம் வரை கெடாது.

✓ இந்த சத்துமாவு கூழை காலை வேளையில் எடுத்து கொள்ளும் படி பரிந்துரை செய்கிறோம்.

✓ இதை தினசரி எடுத்து கொள்ள வேண்டும் என்பதில்லை, பொதுவாக ஒரு நபருக்கு ஒரு நாள் கழித்து மறு நாள் என சுமார் 50 கிராம் வரை பயன்படுத்தினால் கூட  போதுமானது.

இதில் குறிப்பிடப்பட்ட சில தானியங்களை முளைகட்டிய பிறகு சேர்க்க படுவதுடன் உடலுக்கு பொருந்தும் வகையில் அனைத்து வகை தானியங்களையும் சரியான விகிதத்தில் சேர்க்கப்பட்டு, இதன் சுவை கூடுவதுடன் மேலும் நல்ல பலனை பெற முடியும்

50வகை தானிய சத்துமாவு

 

.



Events

Posts

Contact us:
📞 +91 8110033336

...